#LATEST

தமிழக தேர்தல் விபரம்

19Mar 2019

வேட்பு மனு தாக்கல்

வேட்புமனு கடைசி நாள்

26Mar 2019

வேட்புமனு பரிசீலனை

27Mar 2019

வேட்புமனு வாபஸ்

29Mar 2019

18Apr 2019

தேர்தல் தேதி

தேனி தொகுதி வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் : ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் பேட்டி

  24-5-2019 10:54

தேனி: தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தமிழக துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதாக இன்று அதிகாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது.

மீதமுள்ள ஒரு தேனி தொகுதியில் வாக்கு என்ணிக்கை மிகவும் தாமதமாக்கப்பட்டது. தேனி தொகுதியில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றிபெற்றார்.

பின்னர் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை பெற்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரவீந்திரநாத் குமார், வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் என்று தெரிவித்தார். தமிழகத்தில் இருந்து அதிமுக, பாஜக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ரவீந்திரநாத் என்பது குறிப்பிடத்தக்கது. 

7 கட்டங்களாக தேர்தல்

18 ஏப்ரல் தமிழகம் வாக்குப்பதிவு

  • முதல் கட்டம்

    11 Apr 2019

  • இரண்டாம் கட்டம்

    18 Apr 2019

  • மூன்றாம் கட்டம்

    23 Apr 2019

  • நான்காம் கட்டம்

    29 Apr 2019

  • ஐந்தாம் கட்டம்

    06 May 2019

  • ஆறாம் கட்டம்

    12 May 2019

  • ஏழாம் கட்டம்

    19 May 2019

செய்திகளை அனுப்ப மின்னஞ்சல் dotcom@dinakaran.com

Copyright © 2019 all rights reserved to Kal Publications