#LATEST

தமிழக தேர்தல் விபரம்

19Mar 2019

வேட்பு மனு தாக்கல்

வேட்புமனு கடைசி நாள்

26Mar 2019

வேட்புமனு பரிசீலனை

27Mar 2019

வேட்புமனு வாபஸ்

29Mar 2019

18Apr 2019

தேர்தல் தேதி

நமது மத பாரம்பரியத்துக்கும், கலாச்சாரத்துக்கும் காங்கிரஸ் அவதூறு ஏற்படுத்தி வருகிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

  14-5-2019 20:47

கண்ட்வா: இந்தியாவின் கலாச்சாரத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், இந்து தீவிரவாதம் என்ற சதியை காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். நாடு முழுவதும் 17வது  மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 6 கட்ட தேர்தல்கள்  முடிவடைந்துள்ளது. இறுதிகட்ட தேர்தல் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்தில்  தேசிய தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலத்தின் கண்ட்வா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை நடந்ததற்கு என்ன செய்ய முடியும் என்று  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சாம் பித்ரோடா கூறியிருப்பது, காங்கிரஸ் கட்சியின் மனோபாவத்தை காட்டுவதாகக் கூறினார்.

இந்தியாவில் எப்போதெல்லாம் பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்களோ, அப்போதெல்லாம், அப்பாவி மக்களை காங்கிரஸ் கட்சியினர் சிறையில் தள்ளுவதாக அவர் குற்றம்சாட்டினார். நமது மத  பாரம்பரியத்துக்கும், கலாச்சாரத்துக்கும் அவதூறு ஏற்படுத்தும் வகையில், இந்து தீவிரவாதம் என்ற சதியை காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். மக்களுக்காக சிறந்த செயல்களை செய்துவிட்டு, தான்  பிரசாரம் செய்து வருவதாகவும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பொய்களைக் கூறி பிரசாரம் செய்து வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

7 கட்டங்களாக தேர்தல்

18 ஏப்ரல் தமிழகம் வாக்குப்பதிவு

  • முதல் கட்டம்

    11 Apr 2019

  • இரண்டாம் கட்டம்

    18 Apr 2019

  • மூன்றாம் கட்டம்

    23 Apr 2019

  • நான்காம் கட்டம்

    29 Apr 2019

  • ஐந்தாம் கட்டம்

    06 May 2019

  • ஆறாம் கட்டம்

    12 May 2019

  • ஏழாம் கட்டம்

    19 May 2019

செய்திகளை அனுப்ப மின்னஞ்சல் dotcom@dinakaran.com

Copyright © 2019 all rights reserved to Kal Publications