#LATEST

தமிழக தேர்தல் விபரம்

19Mar 2019

வேட்பு மனு தாக்கல்

வேட்புமனு கடைசி நாள்

26Mar 2019

வேட்புமனு பரிசீலனை

27Mar 2019

வேட்புமனு வாபஸ்

29Mar 2019

18Apr 2019

தேர்தல் தேதி

தமிழகத்தில் 6 மணி நிலவரப்படி 69.55 சதவீத வாக்குகள் பதிவு : சத்யபிரதா சாஹு

  18-4-2019 20:18

சென்னை: தமிழகத்தில் 38 மக்களவை தொகுதியிலும், புதுச்சேரி 1 மக்களவை தொகுதியிலும், மற்றும் 18 சட்டமன்ற தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி நிலவரப்படி தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளில் 71.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 57.05 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இடைத்தேர்தலில் அதிகபட்சமாக 86.96, குறைந்தபட்சம் சாத்தூரில் 60.87 வாக்குகள் பதிவாகி உள்ளன. இதே போல் புதுச்சேரி மக்களவை தொகுதியில் 6 மணி நிலவரப்படி 78.23% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.  தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 6 மணி நிலவரப்படி 72.67% வாக்குகள் பதிவாகியுள்ளது. 6 மணி நிலவரப்படி மதுரை மக்களவை தொகுதியில் 60.12% வாக்குகள் பதிவாகியுள்ளது.

சத்யபிரதா சாஹு விளக்கம் :

கூட்டத்தை சமாளிக்க அரக்கோணம் கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டதாக எந்த தகவலும் இல்லாத வகையில் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது என்று கூறினார்.

இடைத்தேர்தல் வாக்கு சதவீத விவரம் :

பூந்தமல்லி - 79.14 %
பெரம்பூர் - 61.06 %
திருப்போரூர் - 81.05 %
சோளிங்கர் - 79.63 %
குடியாத்தம் - 81.79 %
ஆம்பூர் - 76.35 %
ஓசூர் - 71.29 %
பாப்பிரெட்டிப்பட்டி - 83.31 %
அரூர் - 86.96 %
நிலக்கோட்டை - 85.50 %
திருவாரூர் - 77.38 %
தஞ்சை - 66.10 %
மானாமதுரை - 71.22 %
ஆண்டிபட்டி - 75.19 %
பெரியகுளம் - 64.89 %
சாத்தூர் - 60.87 %
பரமக்குடி - 71.69 %
விளாத்திகுளம் 78.06 %

7 கட்டங்களாக தேர்தல்

18 ஏப்ரல் தமிழகம் வாக்குப்பதிவு

  • முதல் கட்டம்

    11 Apr 2019

  • இரண்டாம் கட்டம்

    18 Apr 2019

  • மூன்றாம் கட்டம்

    23 Apr 2019

  • நான்காம் கட்டம்

    29 Apr 2019

  • ஐந்தாம் கட்டம்

    06 May 2019

  • ஆறாம் கட்டம்

    12 May 2019

  • ஏழாம் கட்டம்

    19 May 2019

செய்திகளை அனுப்ப மின்னஞ்சல் dotcom@dinakaran.com

Copyright © 2019 all rights reserved to Kal Publications