#LATEST

தமிழக தேர்தல் விபரம்

19Mar 2019

வேட்பு மனு தாக்கல்

வேட்புமனு கடைசி நாள்

26Mar 2019

வேட்புமனு பரிசீலனை

27Mar 2019

வேட்புமனு வாபஸ்

29Mar 2019

18Apr 2019

தேர்தல் தேதி

இந்தியா முழுவதும் ரூ.2464.2 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் : இந்திய தலைமை தேர்தல் ஆணையம்

  12-4-2019 20:7

டெல்லி : மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் சோதனையில் ரூ.2464.2 கோடி மதிப்புள்ள பணம், மதுபானங்கள்,  போதைப் பொருட்கள், தங்கம், இலவசப் பொருட்கள் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளன. 2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  இதன்படி முதற்கட்ட தேர்தல் நேற்று தொடங்கியது.  தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் வருகிற ஏப்ரல் மாதம் 18ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் அன்றைய தினமே நடக்கிறது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.  தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தபின் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் ஈடுபட்டு பணம் மற்றும் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வரும் சோதனையில் ரூ.2464.2 கோடி மதிப்புள்ள பணம், மதுபானங்கள்,  போதைப் பொருட்கள், தங்கம், இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இதுவரை  ரூ475.95 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க தங்கம் உள்ளிட்ட இலவசங்கள் அளிப்பதில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதிகளவு ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு சென்றதில் 2வது இடத்தில் இருந்து முதல்  இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

7 கட்டங்களாக தேர்தல்

18 ஏப்ரல் தமிழகம் வாக்குப்பதிவு

  • முதல் கட்டம்

    11 Apr 2019

  • இரண்டாம் கட்டம்

    18 Apr 2019

  • மூன்றாம் கட்டம்

    23 Apr 2019

  • நான்காம் கட்டம்

    29 Apr 2019

  • ஐந்தாம் கட்டம்

    06 May 2019

  • ஆறாம் கட்டம்

    12 May 2019

  • ஏழாம் கட்டம்

    19 May 2019

செய்திகளை அனுப்ப மின்னஞ்சல் dotcom@dinakaran.com

Copyright © 2019 all rights reserved to Kal Publications