#LATEST

தமிழக தேர்தல் விபரம்

19Mar 2019

வேட்பு மனு தாக்கல்

வேட்புமனு கடைசி நாள்

26Mar 2019

வேட்புமனு பரிசீலனை

27Mar 2019

வேட்புமனு வாபஸ்

29Mar 2019

18Apr 2019

தேர்தல் தேதி

'விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன்'...... பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

  8-4-2019 12:46

டெல்லி: மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. 48 பக்கம் கொண்ட பாஜக தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி,  மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். பாஜக தேர்தல் அறிக்கைக்கு 'சங்கல்ப் பத்ரா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாஜக தேர்தல் அறிக்கையில் 75 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என அதிமுக கூறியிருந்த நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அதுகுறித்து எந்தவித அறிவிப்பும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்

* சட்டத்திற்குட்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும்
* விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
* 60 வயதான சிறு, குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
* உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்
* கல்வி, சுகாதாரம் அனைவருக்கும் வழங்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* தீவிரவாதத்தை முழுமையாக ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும், அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்படும்.
* வணிகர்களுக்கு ரூ.10 லட்சம் வரையிலான விபத்து காப்பீட்டு திட்டம் ஏற்படுத்தப்படும்.
* பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்.
* நீர்ப்பாசன திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும்.
* தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 100 சதவீதம் தூய்மை எட்டப்படும்.
* கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ.25 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.
* அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசித்து ஜி.எஸ்.டி. நடைமுறைகள் மேலும் எளிதாக்கப்படும்.
* நாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்.
* நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் அமைக்கப்படும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்.
* 2022-ம் ஆண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலைகள் இரண்டு மடங்காக விரிவாக்கம் செய்யப்படும்.
* கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
* நாடாளுமன்ற, சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* நாடு முழுவதும் 150 புதிய விமான நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* 2022-க்குள் நாடு முழுவதும் அனைத்து ரயில் பாதைகளும் அகல ரயில் பாதைகளாக மாற்றப்படும்.
* இஸ்லாமிய பெண்களின் உரிமையை நிலைநாட்ட முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்.
* விவசாயிகளுக்கு வட்டியில்லா கிரெடிட் கார்டு வழங்கப்படும்.
* விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* 2024-ம் ஆண்டுக்குள் உள்கட்டமைப்புத் துறையில் ரூ.100 லட்சம் கோடி மூலதன முதலீடுகள் செய்யப்படும்.

7 கட்டங்களாக தேர்தல்

18 ஏப்ரல் தமிழகம் வாக்குப்பதிவு

  • முதல் கட்டம்

    11 Apr 2019

  • இரண்டாம் கட்டம்

    18 Apr 2019

  • மூன்றாம் கட்டம்

    23 Apr 2019

  • நான்காம் கட்டம்

    29 Apr 2019

  • ஐந்தாம் கட்டம்

    06 May 2019

  • ஆறாம் கட்டம்

    12 May 2019

  • ஏழாம் கட்டம்

    19 May 2019

செய்திகளை அனுப்ப மின்னஞ்சல் dotcom@dinakaran.com

Copyright © 2019 all rights reserved to Kal Publications