#LATEST

தமிழக தேர்தல் விபரம்

19Mar 2019

வேட்பு மனு தாக்கல்

வேட்புமனு கடைசி நாள்

26Mar 2019

வேட்புமனு பரிசீலனை

27Mar 2019

வேட்புமனு வாபஸ்

29Mar 2019

18Apr 2019

தேர்தல் தேதி

திமுகவின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்க பாஜவுக்கு அருகதை இல்லை: கனிமொழி பேட்டி

  20-3-2019 4:50

சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்க பாஜவுக்கு அருகதை இல்லை என்று கனிமொழி எம்பி கூறினார். திமுக எம்பி கனிமொழி நேற்று மாலை 3 மணி விமானத்தில் தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:மத்தியில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பாஜ அரசு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் அறிக்கையில் கூறிய எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு, வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு வந்து இந்திய மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவதாக கூறியது உட்பட எந்த திட்டத்தையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.

அதற்கு மாறாக, பாஜ ஆட்சியில் வரலாறு காணாத அளவு வேலை இல்லாத திண்டாட்டம் நாடு முழுவதும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கையை பற்றி விமர்சனம் செய்வதற்கு பாஜவுக்கு எந்த அருகதையும் கிடையாது. திமுக ஏற்கனவே கொடுத்த அனைத்து தேர்தல் அறிக்கையிலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி நிறைவேற்றி உள்ளது. இப்பொழுது வெளியிடப்பட்டுள்ள திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை கருணாநிதியின் வழியில் ஆட்சி நடத்தப்போகும் திமுக தலைவர் ஸ்டாலின் மக்களுக்கு நிறைவேற்றி தருவார். இவ்வாறு அவர் கூறினார்.

7 கட்டங்களாக தேர்தல்

18 ஏப்ரல் தமிழகம் வாக்குப்பதிவு

  • முதல் கட்டம்

    11 Apr 2019

  • இரண்டாம் கட்டம்

    18 Apr 2019

  • மூன்றாம் கட்டம்

    23 Apr 2019

  • நான்காம் கட்டம்

    29 Apr 2019

  • ஐந்தாம் கட்டம்

    06 May 2019

  • ஆறாம் கட்டம்

    12 May 2019

  • ஏழாம் கட்டம்

    19 May 2019

செய்திகளை அனுப்ப மின்னஞ்சல் dotcom@dinakaran.com

Copyright © 2019 all rights reserved to Kal Publications