#LATEST

தமிழக தேர்தல் விபரம்

19Mar 2019

வேட்பு மனு தாக்கல்

வேட்புமனு கடைசி நாள்

26Mar 2019

வேட்புமனு பரிசீலனை

27Mar 2019

வேட்புமனு வாபஸ்

29Mar 2019

18Apr 2019

தேர்தல் தேதி

நாடாளுமன்றம், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் கட்சிகளின் கூட்டணி நிலவரம்

  11-3-2019 19:2

நாடாளுமன்றம், தமிழக சட்டமன்றத்துக்கான 21 தொகுதி இடைத்தேர்தலில் திமுக பலமான கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 10, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 2, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், கொமக, ஐஜேகே ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி என கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. திமுக கூட்டணியில் மதிமுக-வுக்கு ஒரு மக்களவை தொகுதியும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, மேலும் பல்வேறு கட்சிகள் திமுக கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் தர அதிமுக முன்வந்தது. நீண்ட நாள் இழுபறிக்கு பிறகு அதிமுக - தேமுதிக உடன்பாடு கையெழுத்தானது. தேமுதிகவுக்கு 4 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 38 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும், இடைத்தேர்தலில் 21 தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

7 கட்டங்களாக தேர்தல்

18 ஏப்ரல் தமிழகம் வாக்குப்பதிவு

  • முதல் கட்டம்

    11 Apr 2019

  • இரண்டாம் கட்டம்

    18 Apr 2019

  • மூன்றாம் கட்டம்

    23 Apr 2019

  • நான்காம் கட்டம்

    29 Apr 2019

  • ஐந்தாம் கட்டம்

    06 May 2019

  • ஆறாம் கட்டம்

    12 May 2019

  • ஏழாம் கட்டம்

    19 May 2019

செய்திகளை அனுப்ப மின்னஞ்சல் dotcom@dinakaran.com

Copyright © 2019 all rights reserved to Kal Publications